தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/சத்குருவின் ஆனந்த அலை/பொறுப்புணர்வுள்ள மனிதகுலத்தை உருவாக்க வேண்டும்

பொறுப்புணர்வுள்ள மனிதகுலத்தை உருவாக்க வேண்டும்

பொறுப்புணர்வுள்ள மனிதகுலத்தை உருவாக்க வேண்டும்


PUBLISHED ON : ஆக 10, 2026 01:56 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 10, 2026 01:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ருமேனியா நாட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட 'அன்டோல்ட்' சர்வதேச இசை விழாவில் திரண்டிருந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் சிறப்புரையாற்றிய சத்குரு, 'எதிர்கால தலைமுறைக்காக மகிழ்ச்சியான, விழிப்புணர்வான, பொறுப்புணர்வுள்ள மனிதகுலத்தை உருவாக்க வேண்டியது அவசியம்' எனப் பேசினார்.

ருமேனியாவில் உள்ள நபோகா நகரில் ஒவ்வொரு ஆண்டும் 'அன்டோல்ட்' சர்வதேச இசை விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த ஆகஸ்ட் 6 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் சத்குரு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இசை விழாவில் பங்கேற்ற பார்வையாளர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் சத்குரு உருவாக்கியுள்ள 'மிராக்கிள் ஆஃப் மைண்ட்' தியானச் செயலி இலவசமாக வழங்கப்பட்டது.

சத்குருவால் வழங்கப்படும் 7 நிமிட தியானம் இடம்பெற்றுள்ள இந்தச் செயலி, மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைத்து கவனத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக ஹார்வர்டு மருத்துவப் பள்ளி ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த விழாவில் சத்குரு பேசுகையில், 'இந்த இசைத் திருவிழாவில் நாம் கலந்து கொள்வது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டும் அல்ல. நீங்கள் இங்கே ஒரே மனிதகுலமாக, ஒரு சாத்தியமாக ஒன்றிணைந்திருக்கிறீர்கள். நம்முடைய இந்த வாழ்க்கைக்காகவும், இந்த பூமியில் இனி வாழப்போகும் தலைமுறைகளுக்காகவும், மகிழ்ச்சியான, விழிப்புணர்வான, பொறுப்புணர்வுள்ள மனிதகுலத்தை உருவாக்குவது மிகவும் அவசியம். நாம் இதை நிகழச் செய்வோம்' என்று கூறினார்.

சத்குருவின் 'கான்ஷியஸ் மியூசிக் சர்க்கிள்' அமைப்பு, மக்களின் மனநலனை மேம்படுத்தும் பயிற்சிகளை வழங்குவதற்காக 'அன்டோல்ட்' இசை விழாவுடன் இணைந்துள்ளது.

இது குறித்து அன்டோல்ட் யூனிவர்ஸின் நிறுவனர் போக்டன் புடா கூறுகையில், “உலகின் மிகப்பெரிய இசைத் திருவிழாக்களில் ஒன்றை உருவாக்குவதை விடப் பெரிய கனவு ஒன்று எங்களுக்கு எப்போதும் உண்டு. இசை என்பது மக்களை இணைப்பதற்கும், நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்குமான ஒரு சக்தியாக விளங்கும் உலகை உருவாக்குவதுதான் எங்களது நோக்கம். சத்குருவை அன்டோல்ட் மேடைக்கு வரவேற்பதும், கான்ஷியஸ் மியூசிக் சர்க்கிளுடனான இந்த நீண்டகால கூட்டணியைத் தொடங்குவதும் இந்தப் பயணத்தின் முக்கியமான கட்டமாகும்.' எனக் கூறினார்.

உலகளவில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பாதியளவிற்கும் மேற்பட்ட மனநலப் பிரச்சினைகள் 24 வயதிற்கு முன்பே தொடங்குகின்றன. இந்த இசை விழாவிற்கு வருகை தரும் ரசிகர்களில் பெரும்பாலானோர் இதே வயதைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக இசைத் திருவிழா வரலாற்றில், லட்சக்கணக்கான இசை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் ஒன்று திரளும் ஒரு இசைத் திருவிழாவில் ஆன்மீகத் தலைவர் ஒருவர் பிரதான மேடையில் தோன்றி உரையாற்றுவது இதுவே முதல்முறையாகும். இந்த இசை விழாவில், 200-க்கும் மேற்பட்ட உலகின் முன்னணி இசைக் கலைஞர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us