ADDED : செப் 05, 2025 08:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாயகம் இறைவனின் துாதராக அறிவிக்கப்பட்டதும், ''நம் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே! நான் அவனுடயை துாதனாக இருக்கிறேன்'' என நல்வாழ்வுக்கான வழிமுறைகளைக் காட்டினார். இதையறிந்த மெக்காநகர வாசிகள் அவரை துன்புறுத்தினர். 53 வயது வரை மக்களின் கொடுமையை அனுபவித்தார்.
இதன்பின் மெக்காவில் இருந்து 450 கி.மீ., துாரத்தில் உள்ள மதீனாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவரை ஆதரிப்போரின் எண்ணிக்கை பெருகியது. இதன் பின் போர் புரிந்து மெக்கா நகர மக்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளச் செய்தார்.