நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் என்பவர் வியாழன் தோறும் மக்களுக்கு அறிவுரை சொல்வார். அவரிடம் ஒருவர், ''தாங்கள் தினமும் எங்களுக்கு அறிவுரை சொல்லலாமே'' எனக் கேட்டார். அதற்கு அவர், 'தினமும் அறிவுரை கூறினால் சலிப்பு உண்டாகும்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நோய்க்கு மருந்து போல அவ்வப்போது நல்ல விஷயங்களை சொல்வதே சிறந்தது'' என்றார். மக்களுக்கு உபதேசம் செய்பவர்கள் இவரைப் பின்பற்ற வேண்டும். தேவையான நேரத்தில் சொன்னால் போதும்.