நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மெக்காவிற்கு செல்லும் வழியில் இப்னு உமர் ஒரு நபரை சந்தித்தார். அவருக்கு ஸலாம் கூறி தன்னுடன் கழுதையில் ஏற்றிக் கொண்டு பயணித்தார். பின் தலையில் அணிந்திருந்த தலைப்பாகையையும் அவருக்கு கொடுத்தார். அதைக் கண்டதும், ''இவரிடம் ஏன் சலுகை காட்டுகிறீர்கள்'' என இப்னு உமரிடம் சிலர் கேட்டனர்.
''இவருடைய தந்தையும், என் தந்தையும் நண்பர்கள். தந்தைக்கு செய்யும் பணிவிடைகளில் சிறந்தது, அவரது நண்பரின் குடும்பத்தாரை ஆதரிப்பதுதான்'' என்றார்.