தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/பாக்தாத் நகரில்...

பாக்தாத் நகரில்...

பாக்தாத் நகரில்...


ADDED : அக் 08, 2026 02:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2026 02:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கலீபா (ஆட்சியாளர்) உமர் இப்னு அப்துல் அஸீஸ் எளிமைக்கு பெயர் பெற்றவர். அது மட்டுமல்ல. உதவி செய்வதிலும் வல்லவர்.

ஒருமுறை வெளியூரைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், கலீபாவைக் காண பாக்தாத் நகருக்கு வந்தாள். அப்போது கண்ட காட்சிகள் அவளை பிரமிப்பில் ஆழ்த்தியது. வீதி எங்கும் மாட மாளிகைகள் இருந்தன. எதிரில் வந்த பெண்ணிடம், ''இங்கு எல்லா வீடும் அரண்மனை போல இருக்கிறதே. கலீபா எங்கு வசிக்கிறார்'' எனக்கேட்டார்.

அதற்கு அவள், ''திரும்பி பாருங்கள்'' என்றாள்.

மாளிகைக்கு நடுவில் சிறிய குடிசை இருந்தது.

''எனக்குத் தான் காது கேட்காது என்றால்... உனக்குமா'' எனக் கேட்டாள் மூதாட்டி.

''நீங்கள் கேட்டது காதில் விழுந்ததால் தான் நான் கலீபாவின் வீட்டை காட்டினேன்'' என்றாள் அவள்.

இதைக் கேட்ட மூதாட்டிக்கு மயக்கம் வந்தது.

''என்ன... கலீபா வசிப்பது இந்தக் குடிசையிலா...'' என இழுத்தாள்.

அதற்குள் குடிசையை விட்டு வெளியே வந்தார் கலீபா. நடந்ததை அந்தப் பெண் கூறினாள்.

''எங்கிருந்து வருகிறீர்கள் அம்மா... இந்த உச்சி வெயிலில் ஏன் வந்தீர்கள்'' எனக் கேட்டார் கலீபா.

''வறுமை தீர உங்களிடம் உதவி கேட்டு வந்தேன்'' என்றாள் மூதாட்டி. சிறிதும் தாமதிக்காமல் குடிசைக்குள் சென்று உணவும், பணமுடிப்பும் எடுத்து வந்து கொடுத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us