ADDED : அக் 01, 2026 11:21 AM
அ நிறம் | அளவு
ஸ்டாப் ஒன்றில் நின்றது பஸ். அதில் முதியவர் ஒருவர் ஏறினார். கூட்டமாக இருந்ததால் உட்கார இடமில்லை. அவரைக் கண்டதும் சிறுவன் அகமது, ''இங்கு அமருங்கள் தாத்தா'' என இடம் கொடுத்தான்.
முதியவரும் நன்றி சொல்லியபடி உட்கார்ந்தார். அப்போது அருகில் இருந்த அகமதின் நண்பன், ''இன்னும் ரொம்ப துாரம் நாம் போகணுமே'' எனக் கேட்டான்.
அதற்கு அகமது, ''என் அப்பா சொன்ன அட்வைஸ் நினைவுக்கு வந்தது. அதுதான் இடம் கொடுத்தேன், அதை சொல்கிறேன்'' என்றான்.
ஒருநாள் காலை பள்ளிவாசலில் அமர்ந்திருந்தார் நபிகள் நாயகம். அப்போது அங்கு ஒரு புதியவர் வரவே நகர்ந்து இடம் கொடுத்தார். ' ஏன் நகர்ந்து இடம் கொடுத்தீர்கள்' என அருகில் உள்ளவர் கேட்ட போது, ''பொது இடத்தில் மற்றவர் வரும் போது அவர்களுக்காக சற்று நகர்ந்தோ, எழுந்தோ இடம் கொடுப்பது நம் கடமை'' என்றார்.
