நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடும்பம் என்பது ஒருவருக்கு கிடைக்கும் பரிசு என்றே சொல்லலாம். உலகில் பெற்றோர், உறவினரின் அன்பும், ஆதரவும் கிடைக்காமல் பலர் வாழ்கின்றனர்.
ஆதரவற்ற குழந்தைகள் படும் கஷ்டத்தைப் பார்த்தால் அன்பின் அருமையை உணரலாம். ஆதரவற்றோருக்கு உதவி செய்யுங்கள். அவர்களுக்கு பணம், பொருள் தராவிட்டாலும் ஆறுதலாக பேசுங்கள். பிறந்த நாள், திருமண நாளை ஆதரவற்றோர், அனாதைகளுக்கு உதவி செய்து கொண்டாடுங்கள். இதற்கான கூலி மறுமை நாளில் கிடைக்கும்.
அநாதைகளின் சொத்து, பொருட்களை பாதுகாக்க நேர்ந்தால் அவர்களுக்கு தேவையான நேரத்தில் குறைவின்றி கொடுங்கள்.

