
* நல்ல எண்ணம் கொள்வது இறைவழிபாட்டின் ஓர் அங்கமாகும்.
* வியாபாரத்தில் அதிகமாக சத்தியம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில் வியாபாரம் நன்கு நடைபெற இது உதவும். ஆனால் நற்பேறுகளை அழித்துவிடும்.
* தங்கம், வெள்ளி, இவ்விரண்டில் ஏதாவது கலந்த பாத்திரத்தில் எவன் தண்ணீர் அருந்துகிறானோ அவன் உண்மையில் தனது வயிற்றில்
நரகத்தின் நெருப்புக் கங்கைத்தான் போடுகின்றான்.
* துன்பம் ஏற்பட்டுவிட்டது என்பதற்காக எவரும் மரணம் வரவேண்டும் என்று ஆவல் கொள்ள வேண்டாம்.
* உங்களுடைய சகோதரன் அநீதி இழைப்பவனாக இருந்தாலும் உதவி செய்யுங்கள்.
* கொடுக்கல், வாங்கலின் போது எவர் மென்மையாக நடந்து கொள்கிறாரோ அவர் மீது இறைவன் கருணை பொழிவான்.
* தானியத்தை பதுக்கி வைக்கின்றவன் குற்றவாளியாவான்.
* நாம் யாருடன் நட்பு கொள்கிறோம் என்பதை கவனித்து நட்பு கொள்ள வேண்டும்.
* உறவினர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள்.
* நண்பர்களுக்கு இக்கட்டான நேரத்தில் அவர்களுடன் இருந்தால் நன்மை உண்டு.
* யார் குறித்தும் தவறாக பேசாதீர்கள். மீறினால் அதற்குரிய பாவம் வந்து சேரும்.