தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : செப் 03, 2026 11:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 11:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராதா.கே, கரோல்பார்க், டில்லி: விரும்பியவருடன் திருமணம் நடக்க...

ராதையுடன் உள்ள கிருஷ்ணருக்கு புதன்தோறும் (மாலை 5:30 - 7:30 மணி) விளக்கேற்றுங்கள்.



யமுனா.ஆர், அன்னுார், கோயம்புத்துார்: கிருஷ்ணர் மயில்பீலியை தலையில் சூடியிருப்பது ஏன்?

அழகு, துாய்மையின் அடையாளம் இது.

பாமா.பி, வண்டலுார், காஞ்சிபுரம்: குழல் ஊதும் கிருஷ்ணர் வீட்டில் இருக்கலாமா?

குழல் ஊதும் கிருஷ்ணர் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி இருப்பாளே... உங்களுக்கு அவளை பிடிக்காதா?

யசோதா.எம், ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர்: முன்வினை பாவம் தீர...

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை...' எனத் தொடங்கும் திருப்பாவை பாடலை தினமும் பாடுங்கள்.



கீதா.எஸ், கோடம்பாக்கம், சென்னை: கிருஷ்ணர் தேய்பிறை அஷ்டமியில் பிறந்ததால் அது தோஷமான நாளா...

இல்லை. அஷ்டமி திதியுடன் ரோகிணி நட்சத்திரம் சேர்வதால் கிருஷ்ண ஜெயந்தி புனிதமானது.

பிருந்தா.ஏ, அகத்தீஸ்வரம், கன்னியாகுமரி: கிருஷ்ண ஜெயந்தி அன்று பகவத் கீதை படிக்கலாமா...

படிக்கலாம். அத்துடன் பாகவதத்திலுள்ள 10வது அத்யாயமான கிருஷ்ண வரலாறை படியுங்கள்.

ருக்மணி.எம், கடையநல்லுார், தென்காசி: தொழில் வளர்ச்சிக்கு...

வெள்ளி தோறும் செந்தாமரை அல்லது மல்லிகை பூவால் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

துளசி.எல், உத்தமபாளையம், தேனி: ஆவணி ஞாயிறு அன்று (செப்.6, 13) சூரியனை வழிபட்டால்...

கண் பார்வை, உடல்நலம், முன்னோர் ஆசி, அரசுப்பணி கிடைக்கும்.

தேவகி.சி, திருவாமத்துார், விழுப்புரம்: பண்டிகை இல்லாத நாளில் மாவிலையை வீட்டில் கட்டலாமா?

எப்போதும் மாவிலை கட்டுவது நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us