sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜன 22, 2026 12:25 PM

Google News

ADDED : ஜன 22, 2026 12:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.ரங்கசாமி, வடுகபட்டி, தேனி: *தினமும் பகவத்கீதை படித்தால்...

நம்பிக்கையுடன் படியுங்கள். கிருஷ்ணர் அருளால் அமைதி, நிம்மதி கிடைக்கும்.

ரா.தனபால், புதுபெருங்களத்துார், சென்னை: தினமும் கந்தசஷ்டி

கவசம் பாடலாமா?

காலையும், மாலையும் அவசியம் பாடுங்கள். நவக்கிரகத்தால் நன்மை கிடைக்கும்.

எம்.ரம்யா, மார்த்தாண்டம், கன்னியகுமாரி: அபிஜித் முகூர்த்தம் என்றால்...

அபிஜித் என்றால் 'வெற்றி தருவது'. முகூர்த்த நேரத்தை தவற விட்டவர்கள் இதில் (காலை 11:20 - 12:50 மணி) நடத்தலாம்.

த.நேரு, வெண்கரும்பூர், கடலுார்: *பைரவருக்கு பூசணிக்காய் தீபமேற்றலாமா...

இது இப்போது ஏற்பட்ட வழக்கம். அனுபவ ரீதியாக பலன் கிடைப்பதால் ஏற்றுகின்றனர்.

பி.குமார், கருமத்தம்பட்டி, கோயம்புத்துார்: நவக்கிரகங்களில் சனீஸ்வரருக்கு மட்டும் ஈஸ்வர பட்டம் ஏன்?

'சனை' என்றால் மந்தமாக, 'சரன்' என்றால் செல்பவர். சனை+சரன்= சனைச்சரன். இதுவே சனீஸ்வரன் என்றானது.

அ.தன்யஸ்ரீ, பசவன்குடி, பெங்களூரு: குத்து விளக்கிற்கு பதிலாக சிறிய அகலில் விளக்கு ஏற்றலாமா?

எந்த விளக்கு ஏற்றினாலும் புண்ணியம்.

து.சேரன், ஆலங்குளம், தென்காசி: பெருமாளுக்கு உரிய பூக்கள்...

துளசி, பவழமல்லி, மல்லிகை.

க.சுப்பிரமணியன், மேல்அக்ரஹாரம், விழுப்புரம்: பெருமாள் கோயிலில் தாயாரை முதலில் தரிசிக்கணுமா...

தாயாரை முதலில் தரிசித்தால் தான் பெருமாளின் அருள் கிடைக்கும்.

நா.வேலன், பி.ஆர்.சி. காலனி, மதுரை: மனக்கஷ்டம், பணக்கஷ்டம் தீர...

தேவையற்ற விஷயத்தில் தலையிடாதீர்கள். வீண்செலவை தவிருங்கள்.






      Dinamalar
      Follow us