ADDED : ஜூலை 09, 2026 09:32 AM

ஜூலை 10 ஆனி 26: கார்த்திகை, ஏகாதசி விரதம். திருவண்ணாமலை ரமணாசிரமத்தில் மாதுர்பூதேஸ்வரர் பூஜை. வேலுார் ரத்தினகிரி பாலமுருகன் தங்க ரதம். திருப்பரங்குன்றம் முருகன் தங்கமயில் வாகனம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்கப்பல்லக்கு. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
ஜூலை 11 ஆனி 27: திருப்புல்லாணி ஜெகநாதப்பெருமாள், திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள், அழகர்கோவில் கள்ளழகர் திருமஞ்சனம். மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.
ஜூலை 12 ஆனி 28: முகூர்த்த நாள். மாதசிவராத்திரி. பிரதோஷம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயர் திருமஞ்சனம்.
ஜூலை 13 ஆனி 29: சங்கரன்கோவில் கோமதி அம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள், திருப்பதி பெருமாள் ராமானுஜருடன் புறப்பாடு. அகோபிலமடம் 9வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்.
ஜூலை 14 ஆனி 30: அமாவாசை விரதம். ராமநாதபுரம் கோதண்டராமர் உற்ஸவம் ஆரம்பம். சுவாமிமலை முருகன் தங்கப்பூமாலை சூடியருளல். பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு. திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயில் தெப்பம். குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு.
ஜூலை 15 ஆனி 31: சந்திர தரிசனம். திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு. ராமநாதபுரம் கோதண்டராமர் சிம்ம வாகனம். ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி பால் அபிஷேகம்.
ஜூலை 16 ஆனி 32: அமிர்த லட்சுமி விரதம். மதுரை மீனாட்சி அம்மன் முளைக்கொட்டு உற்ஸவம் ஆரம்பம். திருப்பதி பெருமாள் புஷ்பாங்கி சேவை.
