
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கிலாந்தில் வாழ்ந்தவர் திண்டேல். லட்சியவாதியான இவர் பைபிளை எளிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். இவரின் செயல்பாடுகள் அங்குள்ள குருமார்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவருடைய வீட்டிற்கு தீ வைத்தனர். அப்படி இருந்தும் அவர் தன் கனவை உண்மையாக்க பாடுபட்டார். ஒருநாள் இரவில் அவர் துாங்கும் போது குருமார்கள் தீயிட்டு கொளுத்தினர். உயிர் விடும் போது, 'இங்கிலாந்து மன்னரின் கண்களை திறப்பீராக. இங்கு வாழும் மக்களை நீரே காத்தருள்க' என பிரார்த்தனை செய்தார். பின்னாளில் அவரது வரலாறை கேள்விப்பட்ட மன்னர் ஜேம்ஸ் அவரது லட்சியத்தை நிறைவேற்றினார். லட்சியவாதிகள் தோற்பதில்லை.