நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குழந்தையை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல வந்தார் அவர்களின் குடும்ப மருத்துவர். ''இப்படி இருக்காதீர்கள். ஒரு குழந்தையை தத்து எடுத்து அன்பு செலுத்துங்கள்'' என்றார். அனாதை விடுதிக்குச் சென்ற அவர்கள், அங்கு தன் மகனைப் போல இருந்த சிறுவனை பார்த்து, கட்டி அணைத்துக் கொண்டனர்.
''எங்களுடன் வருவாயா? விளையாட பொம்மைகள், சாக்லெட்கள், புது சட்டை எல்லாம் தருவோம். உன் விருப்பமான பலகாரங்களை செய்து தருவோம். ஜாலியாக ஊர் சுற்றலாம்'' என்றனர்.
பெற்றோரின் அன்பை அறியாத சிறுவனுக்கு ஏதும் புரியவில்லை. ''உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?'' எனக் கேட்டான். ''கண்ணே... உன் அன்பு வேண்டும்'' என்றனர். அவனும் சம்மதித்தான். இந்த பெற்றோர் போல ஆண்டவரும் நம் மீது அன்பு கொண்டவராக இருக்கிறார்.