நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெத்லகேமில் ஆலயம் ஒன்றின் முகப்பில் ஆடு ஒன்றை வரைந்து வர்ணம் தீட்டிக் கொண்டிருந்தார் ஓவியர். இதைப் பார்த்த சிலருக்கு, 'இவர் ஆண்டவரை மறந்து விட்டு ஆட்டை மட்டும் வரைவது ஏன்' என சந்தேகம் ஏற்பட்டது.
இதை அறிந்ததும், ''உங்களின் சந்தேகம் எனக்கு புரிகிறது. முன்பு ஒருமுறை சாரம் முறிந்ததால் மேலே இருந்து தரையில் விழுந்தேன். அப்போது ' ஆண்டவரே... எம்மைக் காப்பாற்றும்' என மனதிற்குள்ளேயே பிரார்த்தனை செய்தேன். கொழுத்த ஆடு ஒன்று என்னை தாங்கியபடி கீழே இறக்கி விட்டது போல உணர்ந்தேன். எனக்கு எந்தக் காயமும் இல்லை. இதற்கு நன்றியாக ஆலயத்தின் முகப்பில் ஆட்டுக்குட்டி வரைந்துள்ளேன்'' என்றார் ஓவியர்.
இக்கட்டான நேரத்திலும் நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.