
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகி சூசன்னா பாபிலோனில் வாழ்ந்தாள். ஆசைக்கு இணங்காவிட்டால் அவமானப்படுத்துவோம் என இரண்டு கொடியவர்கள் மிரட்டினர். அவளோ, 'பாவச் செயல்களில் ஈடுபட மாட்டேன். உங்களால் முடிந்ததை செய்யுங்கள்' என கோபமாக தெரிவித்தாள். இளைஞன் ஒருவனுடன் பொது இடத்தில் தவறாக நடந்ததாக அவள் மீது வழக்கு தொடுத்தனர்.
தன் நிலையை எண்ணி ஆண்டவரிடம் மன்றாடினாள். நீதிமன்றத்தில் இருந்த தானியேல் என்பவர், 'வழக்கை தீர விசாரித்து நியாயத்தின் பக்கம் தீர்ப்பு வழங்குங்கள்' என நீதிபதியை வேண்டிக் கொண்டார். இரண்டு கொடியவர்களையும் தனித்தனியாக கடுமையுடன் விசாரித்தார் நீதிபதி. முரணான பதில்களை இருவரும் கூறவே, அவர்களுக்கு தண்டனை கிடைத்தது. பொய் எப்போதும் நீடிக்காது.

