/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
புஜேராவில் பொதுமக்களை கவர்ந்து வரும் ஷேக் ஜாயித் பள்ளிவாசல்
/
புஜேராவில் பொதுமக்களை கவர்ந்து வரும் ஷேக் ஜாயித் பள்ளிவாசல்
புஜேராவில் பொதுமக்களை கவர்ந்து வரும் ஷேக் ஜாயித் பள்ளிவாசல்
புஜேராவில் பொதுமக்களை கவர்ந்து வரும் ஷேக் ஜாயித் பள்ளிவாசல்
செப் 21, 2025

புஜேரா: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அழகிய கடற்கரை நகரம் புஜேரா ஆகும்.
புஜேராவில் 210 மில்லியன் செலவில் கட்டப்பட்ட ஷேக் ஜாயித் பள்ளிவாசல் கடந்த 2015 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதன் மூலம் அமீரகத்தின் இரண்டாவது பெரிய பள்ளிவாசல் என்ற பெருமையினை இந்த பள்ளிவாசல் பெற்றுள்ளது.
39,580 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த பள்ளிவாசலில் ஒரே நேரத்தில் 28,000 பேர் தொழுகை செய்யலாம். புஜேராவின் மத்தார் பின் முகம்மது சாலையில் இந்த பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்த பள்ளிவாசலில் 63 டோம்கள் (domes) எனப்படும் கூம்பு வடிவ அமைப்பு கொண்டுள்ளது. மேலும் 6 உயரமான மினாராக்கள் உள்ளன. இந்த மினாராக்கள் ஒவ்வொன்றும் 80 முதல் 100 மீட்டர் உயரம் கொண்டது.
இந்த புதிய பள்ளிவாசல் புஜேரா நகருக்கு மேலும் பெருமை சேர்க்க கூடிய வகையில் அமைந்துள்ளது.
இந்த பள்ளிவாசலை வளைகுடா மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து பார்வையிட்டு வருகின்றனர்.
இந்தப் பகுதியில் அமீரகத்தின் மிகவும் பழமையான அல் பிதியா பள்ளிவாசல் இருக்கிறது. அமீரகத்தின் இரண்டாவது பெரிய பள்ளிவாசலான ஷேக் ஜாயித் பள்ளிவாசலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்லாமிய கலாச்சார வரலாற்றில் புஜேரா முக்கிய இடத்தைப் பிடிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த பள்ளிவாசல் துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லின் சுலேமானியா பள்ளிவாசலின் தோற்றத்தை ஒத்திருப்பதாக உள்ளது.
இதன் ஒவ்வொரு பகுதியும் மிகவும் நேர்த்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளிவாசலை பொதுமக்கள் வார நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பார்வையிடலாம்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement

