/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் அமீரக சுற்றுச்சூழல் கருத்தரங்கு
/
துபாயில் அமீரக சுற்றுச்சூழல் கருத்தரங்கு
செப் 02, 2024

துபாய் : துபாயில் அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் நடந்த கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கில் அதிகரித்து வரும் கட்டிடங்கள் காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கருத்தரங்குக்கு அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் தலைவி ஹபிபா அல் மராசி தலைமை வகித்தார்.
அவர் தனது உரையில் பூஜ்ய கார்பன் உமிழ்தல் இலக்கை அடைய அரசுத்துறைகள் மட்டுமல்லாமல் தனியார் கட்டிட உரிமையாளர்களும் சிறப்பான ஒத்துழைப்பு வழங்க முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றார். கருத்தரங்கில் புரோக் பீல்டு பிராபர்டீஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஹைதம் இப்ராஹிம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement