/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் இந்திய தூதருக்கு பிரிவு உபசார விழா
/
துபாயில் இந்திய தூதருக்கு பிரிவு உபசார விழா
செப் 21, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய்: துபாய் இந்திய கன்சுலேட்டில் பணிநிறைவு பெற்று செல்லும் இந்திய தூதர் சஞ்சய் சுதிருக்கு பிரிவு உபசார விழா நடந்தது.
இந்த விழாவுக்கு இந்திய கன்சல் ஜெனரல் சதீஷ்குமார் சிவன் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் இந்திய தூதரின் சிறப்பான சேவைகள் குறித்து நினைவு கூர்ந்தார். மேலும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.
அதனையடுத்து இந்திய தூதர் ஏற்புரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கன்சுலேட் அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதனையடுத்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement

