மனநலத்தை பாதுகாக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன?

இன்றைய நாகரிக உலகில் மனச்சோர்வு, மனஅழுத்தம், போதை, டிஜிட்டல் அடிமைத்தனங்கள், துாக்கமின்மை போன்ற அனைத்தும் பரவலாக காணப்படும் மனநல பிரச்னைகள்தான்.

பொறுமையின்மை, வளர்ப்பு முறை மாற்றங்கள், கூட்டுக்குடும்பங்கள் சிதைவு, பெற்றோர் கண்காணிப்பு இன்மை, வேலைப்பளு, பொருளாதார நெருக்கடி என இதற்கு பல அடிப்படை காரணிகள் உள்ளன.

எனவே, மன நலத்தை பாதுகாக்க முதலில் சரியான உறக்கம் அவசியம்.

எட்டு மணி நேரம் சரியான நேரத்தில், ஆழமான உறக்கம் இல்லை என்றாலே மூளை பாதிக்கப்பட்டு படிப்படியாக மனநல சிக்கல்களை ஏற்படுத்தி விடும்.

தவிர, உடற்பயிற்சி, நடை பயிற்சி, ஆரோக்கிய உணவு முறை வேண்டும்.

அனைவரும் தனக்கான பொழுதுபோக்கு பழக்கங்களை வைத்துக்கொள்ள வேண்டும்.

சோசியல் கனெக்ட் எப்போதும் இருப்பதும், தன்னம்பிக்கையுடன் வாழ்வில் இலக்குடன் பயணித்தால் மனநலத்தை பாதுகாக்கலாம்.