உடல் சோர்வுக்கு முதுமை மட்டுமே காரணம் கிடையாது

உடல் சோர்வு, வயதாகிவிட்டால் வரும் என்ற பொதுவான கருத்து தவறானது.

ரத்தசோகை, தைராய்டு, பிற தீவிர வியாதிகளின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். டாக்டரிடம் பரிசோதனை செய்ய கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அவசியம்.

நிமோனியா பாதிப்பை தடுக்க, ஆண்டுக்கு ஒரு முறை ப்ளூ தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம்.

ஆண்டுக்கு ஒரு முறை, முழு உடல் பரிசோதனை செய்வது நோய் உள்ளதா, வர வாய்ப்புள்ளதா என்பதை அறிந்து, முன்னெச்சரிக்கையாக செயல்பட உதவும்.

வாழ்க்கை முறையை மாற்றி உடல் இயக்கம், உணவு முறை, உடற்பயிற்சி, போன்றவற்றை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

வயது அதிகரிக்கும் போது, நோய் எதிர்ப்பு திறன் குறைதல், தேய்மானங்கள், தொற்றாநோய் போன்றவை சாதாரண பிரச்னைகளை கூட, அசாதாரண நோய்களாக மாற்றிவிடும்.

எனவே, எந்த உடல் அறிகுறிகளையும் அலட்சியம் செய்யக்கூடாது.