குட்டீஸ்களுக்கு பிடித்த பாசிப்பருப்பு லட்டு
பாசிப்பருப்பை கழுவி, சுத்தம் செய்யவும்; பின், அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் நன்றாக வறுக்கவும்.
அதன் நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும். ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, சிறிது நீர் ஊற்றி தேவையானளவு வெல்லத்தை சேர்த்து பாகு கொதிக்க விடவும்.
பின் அடுப்பில் கடாயை வைத்து, ஐந்து ஸ்பூன் நெய் ஊற்றி சூடானவுடன், பொடித்த பாதாம், முந்திரிப்பருப்பு, கொப்பரை துருவல், உலர்ந்த திராட்சையை போட்டு, பொன்னிறமாக வறுக்கவும். தீய்ந்துவிடக்கூடாது.
ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள வெல்லப்பாகை அடுப்பில் மிதமான தணலில் வைத்து, அதில் பாசிப்பருப்பு மாவை போடவும்.
தொடர்ந்து, ஏலக்காய் துாள், சிறிதளவு நெய் ஊற்றி கட்டிகள் இல்லாமல் கிளறவும். இது ஆறி கெட்டியானதும், லட்டு பிடிக்க வேண்டும்.
இதில், புரோட்டீன் சத்து நிறைந்துள்ளதால், குட்டீஸ்களுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸாக தரலாம்; ஆர்வமுடன் சாப்பிடுவர்.
வெல்லத்துக்கு பதிலாக சர்க்கரை சேர்த்தும் இதை செய்யலாம்.