கலர் காம்பினேஷன் நல்லா இருந்தா கம்பீரமாகத் தெரியலாம்!
சரியான நிறங்களைத் தேர்வு செய்து அணிந்தாலே, சாதாரண உடையில் கூட நீங்கள் கம்பீரமாகத் தெரிவீர்கள்.
குறிப்பாக, ஆண்கள் ஷர்ட் மற்றும் பேன்ட்ஸ் அணியும் போது கவனிக்க வேண்டும்.
உடைகளின் விலை உங்களை அழகாக்குவதை விட, நீங்கள் தேர்வு செய்யும் நிறங்களின் பொருத்தம், உங்களை மற்றவர்களிடமிருந்து தனித்துக்காட்டும்.
மெரூன் மற்றும் பிஸ்தா கிரீன் போன்ற அடர் மற்றும் மென்மையான நிறங்களுக்கு கிரீம் நிற பேன்ட்ஸ் ஒரு 'கிளாசிக்' லுக்கைத் தரும்.
சிகப்பு, பிங்க் மற்றும் கிரே நிற சட்டைகளுக்கு கருப்பு நிற பேன்ட்ஸ் எப்போதும் ஒரு போல்டான தோற்றத்தை கொடுக்கும்.
நேவி புளூ சட்டையும் வெள்ளை நிற பேன்ட்சும் அலுவலகம் மற்றும் விசேஷங்களுக்கு ஒரு பிரீமியம் லுக்கைத் தரும்.
எனவே, இனி ஆடை எடுக்கும் போது விலையை விட, அந்த நிறங்கள் உங்களுக்கு பொருந்துகிறதா, சரியான காம்பினேஷனில் இருக்கிறதா என்பதை கவனித்தாலே போதும்.