பறிமுதல் செய்யப்படும் பணம்! திரும்பப் பெறும் வழிமுறைகள் என்னென்ன!

தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திரும்பப் பெற, உரிய ஆவணங்களுடன் மாவட்ட தேர்தல் அதிகாரி/ நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் கோரிக்கை வைக்கலாம்.

சோதனையின் போது ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருப்பின் அவை விசாரணைக்கு பின் திருப்பி வழங்கப்படும்.

மேலும் சட்டவிரோத ஆதாரங்கள் இல்லை எனவும் அவை நிரூபிக்கப்பட வேண்டும்.

பணத்திற்கான சரியான ஆதாரமாக வங்கி பாஸ்புக், ஏடிஎம் ஸ்லிப், வணிக ரசீது இருந்தால், அதை மாவட்ட அளவிலான மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கவும்.

அந்த ஆவணங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி, கருவூல அலுவலர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரி கொண்ட குழு பரிசீலிக்கும்.

கொடுக்கப்பட்ட ஆவணங்கள் திருப்திகரமாக இருந்தால், 24 மணி நேரத்திற்குள் பணம் திருப்பி அளிக்கப்படும்.

சரியான ஆதாரங்கள் இல்லை என மறுக்கப்பட்டால், மாநில அளவிலான தேர்தல் அதிகாரியிடம் பணம் குறித்து மேல்முறையீடு செய்யலாம்.

ஆனால் போதுமான ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் சேர்க்கப்பட்டு, பின் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்படும்.