ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 டிரிக்ஸ் !

வாரத்தில் ஒரு நாள் பழங்கள் மற்றும் பழச்சாறு மட்டுமே அருந்தும் போது, உடலிலுள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறும். ரத்த ஓட்டம் மேம்படும்.

தினமும் 3 - 4 லிட்., தண்ணீர் குடித்து வர உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். இது உடலில் நச்சுகளை தேங்கவிடாது; சரும பிரச்னைகளை தவிர்க்கலாம்.

அளவுக்கதிகமான யோசனை, எதிர்காலம் குறித்த பயம் மன அழுத்தம், தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்; உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தைராய்டுக்கு வாய்ப்புள்ளது.

கழிவுகள் உடலில் சேர்வதுதான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணமென இயற்கை மருத்துவம் கூறுகிறது. மலச்சிக்கல் தான் பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

தினமும் 30 - 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது அவசியமானது. எனவே, நடைபயிற்சி, யோகா மற்றும் பிராணயாமம் போன்றவற்றை முயற்சிக்கலாம்.

அதேவேளையில், முடிந்தளவு மருந்துகளை குறைத்து, உணவு முறைகளில் ஆரோக்கியமான மாற்றத்தை கொண்டு வந்தாலே உடல் கோளாறுகள் குறையும்.