UPDATED : ஆக 23, 2025 02:47 PM
ADDED : ஆக 23, 2025 02:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ் சினிமாவில் அதிகபட்ச வசூலாக ரஜினிகாந்த் நடித்த '2.0' படம்தான் இதுவரையிலும் உள்ளது. கடந்த ஏழு வருடங்களாக அந்த சாதனை முறியடிக்கப்படாமல் உள்ளது. கடந்த வாரம் வெளியான 'கூலி' படம் அந்த சாதனையை முறியடித்து 1000 கோடி வசூலை எட்டும் என படம் வருவதற்கு முன்பாக சிலர் கூறினார்கள். ஆனால், '2.0' படத்தின் வசூலையே 'கூலி' படம் தாண்டுமா என்பது சந்தேகம்தான்.
படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்றும், நாளையும் ஓரளவிற்கு படத்திற்கு வரவேற்பு இருக்கும். அடுத்த வார வேலை நாட்கள் ஆரம்பித்தால் வரவேற்பு மிகவும் குறைந்துவிடும் என்பதுதான் உண்மை நிலவரம். கடைசியாக நான்கு நாள் வசூலாக 404 கோடி என்றார்கள்.
இதனால், தமிழ் சினிமாவில் 1000 கோடி வசூல் என்பது கனவாகவே தொடர்கிறது.