/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் பள்ளி மாணவர்கள் அவதி
/
ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் பள்ளி மாணவர்கள் அவதி
ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் பள்ளி மாணவர்கள் அவதி
ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் பள்ளி மாணவர்கள் அவதி
ADDED : டிச 09, 2025 06:26 AM
திருச்சுழி: திருச்சுழியில் சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்லும் வாகனங்கள் ரோட்டின் இருபுறமும் வரிசை கட்டி நிறுத்தி வைத்திருப்பதால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
திருச்சுழி வடக்கு ரத வீதியில் போலீஸ் ஸ்டேஷன் அருகில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பத்திரங்களை பதிய மற்றும் பிற பணிகளுக்கு வந்து செல்வர். பத்திர அலுவலகத்திற்கு வருபவர்கள் தங்களுடைய வாகனங்களை ரோட்டின் இருபுறமும் நிறுத்தி வைக்கின்றனர்.
இந்த ரோடு வழியாகத்தான் கோர்ட், அரசு பள்ளி ஆகியவற்றிற்கு செல்ல முடியும். வரிசை கட்டி நிற்கும் வாகனங்களால் பள்ளி மாணவர்களும் அரசு அலுவலர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். வாகனங்களை முறையாக நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

