/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காட்டுப்பன்றிகளால் நெற்பயிர் சேதம்
/
காட்டுப்பன்றிகளால் நெற்பயிர் சேதம்
ADDED : டிச 09, 2025 06:26 AM

சாத்துார்: சாத்துார், நரிக்குடி பகுதிகளில் காட்டுப்பன்றிகளால் மக்காச்சோளம், நெற்பயிற்கள் சேதமாகி வருவதால் விவசாயிகள் வேதனை யடைந்து வருகின்றனர்.
வெம்பக்கோட்டை அருகே சுப்பிரமணியபுரம், சல்வார் பட்டி, இரவார் பட்டி, ராமச்சந்திராபுரம், அச்சங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். மக்காச்சோளம் பயிர்கள் நன்றாக விளைந்து தற்போது கதிர் பிடிக்கும் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியபுரத்தில் விளைந்துள்ள மக்காச்சோள பயிர்களுக்குள் காட்டுப்பன்றிகள் நுழைந்து பயிர்களை தின்று சேதப்படுத்தி உள்ளன. காலையில் மக்காச்சோளம் காட்டுக்குச் சென்ற விவசாயிகள் சேதமடைந்து கிடக்கும் பயிர்களை பார்த்து மனவேதனை அடைந்தனர்.
* நரிக்குடி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. நன்கு வளர்ந்து பால் பிடிக்கும் சமயத்தில் அ. முக்குளம், கல்விமடை உள்ளிட்ட பகுதி வயல்களில் காட்டுப் பன்றிகள் புகுந்து சேதப்படுத்தி உள்ளன. இதனை தடுக்க பல முயற்சிகள் எடுத்தாலும் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

