/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைக்கு தனி பிரிவு 38 படுக்கைகளுடன் துவங்க முடிவு
/
விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைக்கு தனி பிரிவு 38 படுக்கைகளுடன் துவங்க முடிவு
விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைக்கு தனி பிரிவு 38 படுக்கைகளுடன் துவங்க முடிவு
விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைக்கு தனி பிரிவு 38 படுக்கைகளுடன் துவங்க முடிவு
ADDED : டிச 09, 2025 06:22 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் தீக்காயம் சிகிச்சைக்கு 38 படுக்கைகளுடன் தனி பிரிவு துவங்குவதற்கான திட்ட பணிகள் துவங்கி நடந்து வருகிறது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை, சிகிச்சைக்கு அதிக செலவாகும் என்பதால் அரசு மருத்துவமனையை நாடுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும் விருதுநகர், சிவகாசி, சாத்துார், ஸ்ரீவில்லிப்புத்துார், அதனை சுற்றிய பகுதிகளில் அதிக அளவில் பட்டாசு தயாரிப்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பட்டாசு தயாரிப்பு பணிகள் துவங்கி முடிவடைவதற்குள் பல விபத்துக்கள் நடக்கிறது. இந்த விபத்துக்களில் காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போது விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தேசிய சுகாதார இயக்கத்தின் நிதியில் இருந்து 9 ஆயிரம் சதுர அடியில் ரூ. 1.50 கோடியில் 38 படுக்கைகளுடன் தீக்காயத்திற்கான தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்படவுள்ளது.
இந்த தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர், செவிலியர், பணியாளருக்கு தனி அறை, கழிப்பறை, குளியலறை, படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது. இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகள் தனி கவனத்துடன் வழங்கப்படவுள்ளது.
மேலும் தற்போது பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்து தீக்காயம் தீவிர சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டால் பட்டாசு விபத்துக்களில் காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்கும்.

