/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபர் கைது
/
அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபர் கைது
ADDED : அக் 20, 2025 09:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம், பிள்ளை யார்கோவில் பஸ் நிறுத்தம் அருகே மேற்கு சப் இன்ஸ்பெக்டர் சுதன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக விழுப்புரம், பெரிய காலனியைச் சேர்ந்த அருள் மகன் கோகுல்நாத், 19; என்பவர் அதிவேகமாக பைக் ஓட்டி வந்தது தெரியவந்தது.
உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

