/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாகனம் மோதி ஸ்கூட்டரில் சென்றவர் பலி
/
வாகனம் மோதி ஸ்கூட்டரில் சென்றவர் பலி
ADDED : அக் 20, 2025 09:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: மயிலம் அருகே ஸ்கூட்டர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.
மயிலம் அடுத்த பந்த மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வமணி, 48; இவர், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு தனது ஸ்கூட்டரில் விழுப்புரம் - திண்டிவனம் நெடுஞ்சாலையில் சென்றார்.
அப்போது, அடையாளம் தெரியாத வாக னம் ஸ்கூட்டர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தெய்வமணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

