/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காணாமல் போன நபர் குட்டையில் சடலமாக மீட்பு
/
காணாமல் போன நபர் குட்டையில் சடலமாக மீட்பு
ADDED : அக் 20, 2025 09:37 PM

திண்டிவனம்: சென்னை, கொளத்துாரைச் சேர்ந்தவர் ஆசைதம்பி, 41; இவருக்கு 15 ஆண்டு களுக்கு முன் திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.
கடந்த 12ம் தேதி சென்னையில் இருந்து தேவக்கோட்டைக்கு சிகிச்சைக்காக சென்றார். திண்டிவனம் புறவழிச்சாலையில் ஓட்டலில் பஸ் நின்றபோது, கீழே இறங்கி சென்றவர் மீண்டும் திரும்பிவரவில்லை.
திண்டிவனம் போலீசார் கடந்த 16ம் தேதி வழக்குப் பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், திண்டிவனம் அடுத்த ஜ க்காம்பேட்டை சந்திப்பு பகுதியில் சாலையோரம் உள்ள குட்டையில் இறந்த நிலை யி ல் ஆசைதம்பியின் உடல் மிதந்தது.
தகவலறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

