/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெருப்பெரிச்சல் பகுதியில் கிருமிநாசினி தெளிப்பு
/
நெருப்பெரிச்சல் பகுதியில் கிருமிநாசினி தெளிப்பு
ADDED : ஜூலை 20, 2025 06:49 AM

திருப்பூர், : குப்பை கழிவுகள் கொட்டப்படும் பாறைக்குழி அமைந்துள்ள சுற்றுப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில் தினமும் சராசரியாக, 800 மெட்ரிக் டன் அளவு குப்பை கழிவுகள் சேகரமாகிறது. இதில், தரம் பிரிக்கப்படும் குப்பைகள், நுண்ணுர உற்பத்தி; பயோ காஸ் உற்பத்தி மையங்களுக்குச் செல்கிறது.
மக்காத பாலிதீன் கழிவுகள் சிமென்ட் ஆலைகளுக்கும்; இறைச்சி கழிவுகள் பிராணிகளுக்கான உணவு உற்பத்தி நிறுவனத்துக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
பெரும்பாலான குப்பை கழிவுகள் பாறைக்குழிகளில் கொட்டி அழிக்கப்படுகிறது. அவ்வகையில், நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறைக்குழியில் தற்போது குப்பை கழிவுகள் வாகனங்களில் கொண்டு சென்று கொட்டப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போலீஸ் பாதுகாப்புடன், குப்பை கொட்டப்படுகிறது.
இதனால், சுகாதாரம் பாதிக்காத வகையில், சுற்றுப்பகுதி முழுவதும் தற்போது கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.