ADDED : அக் 27, 2025 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மருது பேரவை நிறுவனர் சமயசெல்வம் அறிக்கை: அகமுடையார் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
அகமுடையார் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து, அரசாணை வெளியிட வேண்டும். சிவகங்கையில் அமைய உள்ள மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் சிலையை அமர்ந்த நிலையில் வைக்க வேண்டும். நரிக்குடி சத்திரத்தை புதுப்பிக்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம். தமிழக அரசு இவற்றை நிறைவேற்ற வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

