/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கேபிள் டி.வி., இணைப்பு துண்டிப்பால் இரு தரப்பினர் மோதல்; 5 பேர் மீது வழக்கு

ADDED : அக் 27, 2025 11:30 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கேபிள் டி.வி., இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் குளத்துமேட்டு தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன், 46; கேபிள் டி.வி.,ஆப்ரேட்டர். இவர் கேபிள் இணைப்பிற்கான மாத கட்டணம் செலுத்தவில்லை என மலைக்கோட்டாலத்தை சேர்ந்த மணிகண்டன் மனைவி இளவரசி, 32; என்பவரது வீட்டின் கேபிள் இணைப்பை துண்டித்தார்.
இதனால் ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இது குறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் குணசேகரன் மற்றும் அவரது மகன் கோவிந்தன் மீதும், மற்றொரு தரப்பில் இளவரசி, ராமர், முருகன் ஆகியோர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.