/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசியல் மேதை போல பேசுவதா: தேர்தல் கமிஷனரை விமர்சித்த யதீந்திரா
/
அரசியல் மேதை போல பேசுவதா: தேர்தல் கமிஷனரை விமர்சித்த யதீந்திரா
அரசியல் மேதை போல பேசுவதா: தேர்தல் கமிஷனரை விமர்சித்த யதீந்திரா
அரசியல் மேதை போல பேசுவதா: தேர்தல் கமிஷனரை விமர்சித்த யதீந்திரா
ADDED : அக் 29, 2025 07:31 AM

மைசூரு: ''அரசியல் மேதை போல பேசுகிறார்,'' என்று, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை, முதல்வர் சித்தராமையா மகன் யதீந்திரா விமர்சித்து உள்ளார்.
மைசூரு வருணா தகடூர் கிராமத்தில் நடந்த, காங்கிரஸ் கூட்டத்தில், முதல்வர் சித்தராமையா மகன் யதீந்திரா பேசியதாவது:
ஓட்டுகளை திருடி தான் மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தது. 400 இடங்களில் வெல்வோம் என்று கூறினர். அவர்களால் 240 இடங்களில் தான் வெற்றி பெற முடிந்தது. ஓட்டு திருட்டு நடக்கவில்லை என்றால், இண்டியா கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்து இருக்கும்.
மத்திய தேர்தல் ஆணையம் தனது பணியை சரியாக செய்யவில்லை. ஓட்டு திருட்டு குறித்து, ராகுல் ஆவணங்களுடன் புகார் செய்தார். ஆனால் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், ராகுல் மீதே குற்றச்சாட்டு சொல்கிறார். அரசியல் மேதை போன்று ஞானேஷ் குமார் பேசுகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
யதீந்திராவின் இந்த பேச்சுக்கு, பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.