உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாப்டர் 1 பட வரிசையில் புதிதாக இணைந்த ஜெயசூர்யாவின் மாயன் : டிச., 3ல் ரிலீஸ்

சாப்டர் 1 பட வரிசையில் புதிதாக இணைந்த ஜெயசூர்யாவின் மாயன் : டிச., 3ல் ரிலீஸ்

சமீபகாலமாக சில படங்களுக்கு இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டத்திலோ என்னவோ முதல் பாகம் எடுக்கும் போதே படத்தின் டைட்டில் உடன் சாப்டர் 1 என்கிற வார்த்தையை சேர்த்து விடுகின்றனர். அந்த வகையில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோக சாப்டர் 1, சந்திரா, சமீபத்தில் வெளியான தனுஷின் ஓம் ; சாப்டர் 1 ஆகிய படங்களுக்கு இரண்டாம் பாகம் எடுப்பதற்கான முன்கூட்டிய திட்டத்துடன் இப்படி டைட்டிலை வைத்தனர். அதேசமயம் கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படத்திற்கு அதன் இரண்டாம் பாகம் உருவானபோது ஆச்சரியமாக காந்தாரா சாப்டர் 1 என்று டைட்டில் வைத்தனர். இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் படமும் மாயன் ; சாப்டர் 1 என்கிற டைட்டிலுடன் உருவாகி உள்ளது.

சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்ட இந்த படம் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ளது. வரும் டிசம்பர் 3ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. எதிர்பாராத திருப்பங்களையும் மர்மங்களையும் மையமாகக் கொண்ட மிஸ்ட்ரி திரில்லராக உருவாகும் இந்த படம் ஒரு காவல்துறை அதிகாரியின் விசாரணையின் மூலம் அவிழ்க்கப்படும் ரகசியங்களை பேசுகிறது. அந்த காவல்துறை அதிகாரியாக ஜெயசூர்யா நடித்துள்ளார். மம்முட்டி, விநாயகன் நடிப்பில் வெளியான களம்காவல் படத்தை இயக்கிய ஜிதின் கே ஜோஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !