உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏஒடி : பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தும் குறைவான வசூல்

ஏஒடி : பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தும் குறைவான வசூல்

பவன் சடினேனி இயக்கத்தில், துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படம் 'ஆகாசம்லோ ஒக தாரா'. இப்படம் தமிழில் 'ஆகாயத்தில் ஒரு தாரகை' என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியானது. சுருக்கமாக, 'ஏஒடி'.

இப்படத்தைப் பார்த்த விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டினார். தெலுங்கு திரையுலகத்தில் நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலரும் படத்தைப் பற்றிப் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்கள்.

ஆனால், பெரிய வசூலைக் குவிக்காமல் படம் குறைவான வசூலையே பெற்று வருகிறது. இதுவரையில் 30 கோடி வசூலை மட்டுமே இந்தப் படம் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸில் தெரிவிக்கிறார்கள்.

வெளியீட்டிற்கு முன்பாக படம் மீதான ஒரு எதிர்பார்ப்பை படக்குழு ஏற்படுத்தத் தவறிவிட்டது என்ற கருத்துதான் அதிகம் வெளிவந்துள்ளது. மேலும், தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி நடித்த 'ஓ.ம்' படத்துடன் இப்படம் போட்டியிட வேண்டிய நிலை உருவானது. அதுவும் படத்தின் வசூல் குறைவுக்குக் காரணமாக உள்ளது.

தெலுங்கில் துல்கர் சல்மானுக்கு தனி மார்க்கெட் உண்டு. இதற்கு முன்பு அவர் நடித்த 'சீதாராமம்' படம் 100 கோடி வசூலைப் பெற்றுத் தந்தது. அந்த அளவிற்கு இந்த 'ஏஒடி' படமும் வசூலைக் குவித்திருக்க வேண்டும் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !