சிவகார்த்திகேயனிடமிருந்து ஒரு அன்பான ஆச்சரியம் : ராம்குமார் பாலகிருஷ்ணன்
கடைசியாக பராசக்தி படத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். அதைத் தொடர்ந்து சிவகுமார் முருகேசன் இயக்கும் சேயோன் படத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த படத்தை அடுத்து பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் ஆக் ஷன் படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு ஒரு ஐபோன் 18 ப்ரோ பரிசாக வழங்கியுள்ளார் சிவகார்த்திகேயன். இதை அவர் தனது இணைய பக்கத்தில் பகிந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛சிவகார்த்திகேயன் அண்ணனிடமிருந்து ஒரு அன்பான ஆச்சரியம் கிடைத்தது. இந்த பரிசுக்கு மிக்க நன்றி அண்ணா. இது எனக்கு மிகவும் அர்த்தமுள்ள ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு படம் வெற்றி பெற்ற பிறகு தயாரிப்பாளர்களும் நடிகர்களும் படக்குழுவினருக்கு பரிசு வழங்குவது வழக்கம்தான். ஆனால், திரைப்படம் படப்பிடிப்பில் இருக்கும்போதே இது போன்ற ஒரு பரிசைப் பெறுவது அரிதான ஒன்றாகும். சிவகார்த்திகேயனின் இந்த நற்செயலால் இணையவாசிகளின் பாராட்டை அவர் பெற்று வருகிறார்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தயாரிப்பாளர்கள் இந்த படத்தை 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 30ல் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.