அஜித்தின் டேர் டெவில் : ஸ்ரீலீலாவுக்கு பதிலாக கயாடு லோஹர்
குட் பேட் அக்லி படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கும் படம் டேர் டெவில். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 2ம் தேதி தொடங்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு தாமதமாகி வருவதால், முதன்மை நடிகர்கள் தேர்வில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, இப்படத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் படப்பிடிப்பு தாமதமானதால் கால்சீட் பிரச்னையால் அவர் வெளியேறி விட்டார். இப்போது அவருக்குப் பதிலாக கயாடு லோஹர் கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ளாரம்.
மேலும், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முன்னதாக மோகன்லால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த கதாபாத்திரத்தில் உன்னி முகுந்தன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. டேர் டெவில் படத்தை ஷாலினி அஜித் குமார், பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இதன் மூலம் அவர் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.