உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கும் சாரா அர்ஜூன்!

ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கும் சாரா அர்ஜூன்!


'துரந்தர்' படத்தின் இரண்டு பாகங்களிலும் ரன்வீர் சிங்கின் மனைவியாக நடித்தவர் சாரா அர்ஜூன். அப்படங்களின் தொடர் வெற்றிக்குப் பிறகு, பாலிவுட் சினிமாவில் சாரா அர்ஜூன் பேசப்படும் நடிகையாகியுள்ளார். 20 வயதான இந்த நடிகை தனது நடிப்புத் திறமை மற்றும் திரை ஆளுமைக்காக அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மேலும், துரந்தர் படத்தின் முதல் பாகத்தில் நடித்த பிறகு தெலுங்கில் 'யூபோரியா' என்ற படத்தில் பூமிகாவுடன் இணைந்து நடித்த சாரா அர்ஜூனை, தற்போது சுகுமார் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 17வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இப்போதைக்கு, சாராவின் தேர்வு உறுதி செய்யப்படவில்லை. அவர் இப்படத்தில் இணைவாரா மற்றும் ராம் சரணின் படம் மூலம் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உருவெடுப்பாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அக்டோபர் 25ம் தேதி அன்று ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !