பிளாஷ்பேக் : குறைந்த படங்களில் நடித்து சினிமாவை விட்டு ஒதுங்கிய தூத்துக்குடி பெண்
'பாட்ஷா' படத்தில் ரஜினியின் தங்கைகளாக யுவராணி மற்றும் செண்பகம் நடித்திருந்தார்கள். இவர்களில் சரியாக படிப்பு வராமல், பணக்கார பையனை காதலித்து அந்த திருமணத்திற்கு பையனின் பெற்றோரால் ரஜினிக்கு ஏற்படும் அவமானத்தின் போது அண்ணனுக்கு ஆதரவான கேரக்டரில் நடித்தவர் செண்பகம்.
பாட்ஷா அவருக்கு முதல் படமல்ல... தூத்துக்குடியில் பிறந்த செண்பகம், 'தூதுபோ செல்லக் கிளியே' படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பஞ்சு அருணாச்சலம் இயக்கிய 'கலிகாலம்', சரத்குமாரின் 'ஐ லவ் இந்தியா', பார்த்திபனின் 'உள்ளே வெளியே', சத்யராஜின் 'உடன் பிறப்பு' 'ஜல்லிக்கட்டு காளை', 'திருமூர்த்தி' ஆகிய படங்களில் நடித்தார். 1995-ம் ஆண்டு வெளியான 'பசும்பொன்' படத்தில் நடித்தார். அது தான் இவரது கடைசி தமிழ் படமாக அமைந்தது. அதன் பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை.
80களில் நிலவிய மும்பை மற்றும் மலையாள நடிகைகளின் ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தூத்துக்குடி பெண்ணான செண்பகம், பின்னர் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் இணைந்து வெளிநாட்டில் செட்டிலாகி விட்டார்.