உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய பிக்பாஸ் முத்துக்குமரன்; பெண் தோழி விபரீத முடிவு

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய பிக்பாஸ் முத்துக்குமரன்; பெண் தோழி விபரீத முடிவு


பிக்பாஸ் சீசன் 8-ன் டைட்டில் வின்னர் முத்துக்குமரன். பட்டிமன்ற பேச்சாளரான இவர் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோ போட்டுவரும் வஹிதா அக்தர் என்ற பெண் வெளியிட்ட வீடியோவில், முத்துக்குமரன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

வீடியோவில் அவர் பேசுகையில், ''நான் கடந்த சில நாட்களாக பிரேக்-அப் காரணமாக மனமுடைந்து இருந்தேன். அப்போது சென்னை கத்திப்பாராவில் எதேச்சையாக முத்துக்குமரனை சந்தித்தேன். அவர் கியூட்டாக சில விஷயங்களைச் செய்தார். என்னை அக்.,4ம் தேதி இரவு அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்போது எனக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது, அதன்பின்னர் ஒருவருடன் ரிலேசன்ஷிப்பில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரேக்அப் ஆனது என அனைத்தையும் சொன்னேன். அவருக்கு எல்லாம் தெரிந்தும், என்னை காலையில் தாலிக்கட்டி திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக் கொண்டார்.

பின்னர், அடுத்த நாள் காலையில் நான் என் வீட்டிற்கு வந்ததும் அவரிடம் பேசினேன். அவரும் மீண்டும் என்னை பார்க்க ஆவலாக இருப்பதாக சொன்னார், ஆனால் திருமணம் பற்றி கேட்டால், அதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து வந்தார். மேலும், தனக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் கூறிவிட்டார். இதனால் நான் தற்கொலை செய்யப்போகிறேன்'' எனப் பேசியிருந்தார். இடையே சிகரெட் புகைப்பதும், மது அருந்துவதுமாக அழுகையுடன் வீடியோ பதிவு செய்திருந்தார். சிறிது நேரத்தில் அவரது இன்ஸ்டா கணக்கில் அனைத்து வீடியோக்களும் டெலிட் செய்யப்பட்டிருந்தது.

இந்த அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டதைத் தொடர்ந்து, வஹிதா தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவரது நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், 'எதிர்பாராத விதமாக நான் மருத்துவமனையில் உயிரோடு இருக்கிறேன். அதனால் கவலைப்பட வேண்டாம்' எனத் தெரிவித்துள்ளார். தனது மற்றொரு பதிவில், முத்துக்குமரனுடன் இருக்கும் பழைய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், வஹிதாவின் கன்னத்தை பிடித்த முத்துக்குமரன், 'இந்த மூஞ்சியை எனக்கு பிடிச்சிருக்கு' எனப் பேசியுள்ளார். இதுவும் வைரலாகி வருகிறது.

விளக்கம்

இதுப்பற்றி முத்துக்குமரனிடம் கேட்டதற்கு, ''நானும் வஹிதாவும் நல்ல நண்பர்கள். அவர் ஏன் இப்படி செய்தார் என சத்தியமாக எனக்கு புரியவில்லை. அது குறித்துதான் கிளாரிட்டி கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவர் கொஞ்சம் மனக்குழப்பத்தில் இருக்கிறார்'' என விளக்கமளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !