உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஷ்ணு விஷால் - மமிதாவின் 'இரண்டு வானம்' அக்.,23ல் ரிலீஸ்

விஷ்ணு விஷால் - மமிதாவின் 'இரண்டு வானம்' அக்.,23ல் ரிலீஸ்


'முண்டாசுப்பட்டி, ராட்சசன்' படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் - இயக்குனர் ராம்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'இரண்டு வானம்'. முண்டாசுப்பட்டியில், கிராமத்து கதையாக காமெடியாக எடுத்து ஹிட் கொடுத்த இக்கூட்டணி, அடுத்து ராட்சசன் படத்தை கிரைம் திரில்லராக எடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த படமும் ஹிட் ஆனதால், இவர்களின் கூட்டணியில் தற்போது முழு காதல் படமாக 'இரண்டு வானம்' உருவாகியுள்ளது.

மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். கொடைக்கானலில் 150 நாள்களுக்கும் மேலாக நடைபெற்ற இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. இந்த நிலையில், இப்படம் அக்.,23ம் தேதி தியேட்டரில் ரிலீசாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. மமிதா பைஜூ சமீபத்தில் நடித்த 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ், பெத்லகேம் குடும்ப யூனிட்' ஆகிய படங்கள் 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அந்த வகையில் மமிதாவின் ராசி, 3வது முறையாக விஷ்ணு விஷால் - ராம்குமார் கூட்டணி என படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !