அதிகப் பார்வைகளை அள்ளிய சல்மான் கானின் 'சட்டை கழற்றல்' சம்பவம்
ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகரான சல்மான் கான் ஒரு காலத்தில் 'சட்டை' கழற்றி தனது உடல் அழகைக் காட்டுவதில் ரசிகர்களைக் கவர்ந்து அதிகம் பேசப்பட்டவர்.
ஒரு கிளாமருக்காக, வரவேற்புக்காக அப்படி செய்தவர், சமீபத்தில் 'உடல் தோற்றத்தை' பற்றி கிண்டலடித்தவர்களுக்காக 'சட்டையை கழற்றி' ஒரு சம்பவம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவர் தொகுத்து வழங்கி வரும் ஹிந்தி பிக்பாஸ்-20 நிகழ்ச்சியில் தான் அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது. ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகையாக இருந்த கத்ரீனா கைப்-ன் சமீபத்திய தோற்றத்தைக் குறித்தும், சல்மான் கானின் சில வாரங்களுக்கு முந்தைய தோற்றத்தைக் குறித்தும் சமூக வலைதளங்களிலும் பலரும் 'ட்ரோல்' செய்திருந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உடல் தோற்றத்தைக் கிண்டல் செய்யக் கூடாது என்பதற்கான வலுவான காரணங்களைக் குறிப்பிட்டிருந்தார்.
சல்மான் கானின் அந்த சம்பவத்திற்கு மிக அதிகமான டிஜிட்டல் பார்வைகள் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அந்தக் குறிப்பிட்ட எபிசோடுக்கு 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளதாம். கிரிக்கெட் நிகழ்ச்சிகளுக்குத்தான் இதற்கு முன்பு இப்படியான அதிகப் பார்வைகள் கிடைத்துள்ளன. முதல் முறையாக கிரிக்கெட் அல்லாத ஒரு நிகழ்ச்சிக்குக் கிடைத்துள்ளது. இந்த பிக் பாஸ் சீசனுக்கு மேலும் பிரபலத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.