50 கோடி வசூலில் 'மண்டாடி', சூரியின் பெரிய வெற்றி
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில், சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'மண்டாடி'. தமிழ், தெலுங்கில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று கடந்த நான்கு நாட்களாக நன்றாகவே ஓடி வருகிறது. இன்றும் விடுமுறை தினம் என்பதால் முன்பதிவும் சிறப்பாகவே இருக்கிறது.
50 கோடி வசூலை இந்தப் படம் நெருங்கிவிட்டதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கு நடிகரான சுஹாஸ் இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாலும் தெலுங்கிலும் இப்படத்திற்கு வரவேற்பு அதிகமாகவே உள்ளது என்கிறார்கள்.
சூரி நடித்து இதற்கு முன்பு வெளியான 'மாமன்' படத்தை விடவும் இந்தப் படம் அதிக வசூலை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட 'சர்தார் 2' படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை.
இன்றைய ஆன்லைன் முன்பதிவில் கடந்த ஒரு மணி நேரத்தில் 'சர்தார் 2' படத்தை விடவும் 15 மடங்குக்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவாகி உள்ளன.