ஓடிடி தர வரிசையில் 5வது இடம் பிடித்த மாதவனின் ஜிடிஎன்
கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் உருவான படம் ஜிடிஎன். இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்படும் விஞ்ஞானி மற்றும் தொழிலதிபர் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான இந்த படம் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி திரைக்கு வந்தது. மாதவனுடன் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியை தழுவியது.
கடந்த செப்டம்பர் நான்காம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் இப்படம் வெளியிடப்பட்டது. தியேட்டர்களில் எதிர்பார்த்தபடி வரவேற்பு கிடைக்காத இந்த படத்திற்கு தற்போது ஓடிடி தளத்தில் டாப் 5 தர வரிசையில் முன்னேறி உள்ளது. குறிப்பாக, இந்தியர்கள் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளை சார்ந்த ரசிகர்கள் இப்படத்திற்கு வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.