உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : சிவாஜியை காப்பி அடித்த கவுண்டமணி

பிளாஷ்பேக் : சிவாஜியை காப்பி அடித்த கவுண்டமணி

கவுண்டமணி காமெடியில் கொடி கட்டிப் பறந்த காலத்தில் அவருக்கு காமெடி டிராக் எழுதியவர் வீரப்பன் என்பவர். இவர் நாகேஷ், சந்திரபாபு, தங்வேலு போன்றோருக்கே காமெடி டிராக் எழுதியவர். இவரை தன்னோடு நிரந்தரமாக வைத்துக் கொண்டார் கவுண்டமணி. அவரது புகழ்பெற்ற காமெடி டிராக்குகளை எழுதியவர் வீரமணிதான்.

அவற்றில் முக்கியமான படம் 'சின்னத்தம்பி'. அதில் அவர் மாலைக்கண் பிரச்னை உள்ளவரராக நடித்திருந்தார். அதாவது மாலை 6 மணிக்கு மேல் கண் தெரியாது. அந்த பிரச்னை தனக்கு இருப்பதை காட்டிக் கொள்ளாமல் கவுண்டமணி எப்படி சமாளிக்கிறர் என்பதுதான் காமெடியின் கண்டென்ட்.

இந்த காமெடி சிவாஜி நடித்த 'தவப்புதல்வன்' என்ற படத்தில் இருந்து எடுத்தாளப்பட்டது. முக்தா சீனிவாசன் இயக்கிய இந்தப் படத்தில் சிவாஜி மாலைக்கண் பிரச்னை உள்ளவராக நடித்திருந்தார். அவர் சீரியசாக நடித்திருந்த காட்சிகளை அப்படியே காமெடியாக மாற்றி எழுதச் சொன்னார் கவுண்டமணி. அப்படி உருவானதுதான் அந்த காமெடி காட்சிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !