உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தாய்மையை எதிர்நோக்கும் சமந்தா! என் வாழ்க்கை முற்றிலும் மாறுவதற்கு நான் தயார்!!

தாய்மையை எதிர்நோக்கும் சமந்தா! என் வாழ்க்கை முற்றிலும் மாறுவதற்கு நான் தயார்!!


கடந்த 2025 டிசம்பரில் இயக்குனர் ராஜ் நிடிமொருவை திருமணம் செய்து கொண்டார் சமந்தா. அதையடுத்து, நந்தினி ரெட்டி இயக்கத்தில் அவர் நடித்த 'மா இண்டி பங்காரம்' இந்த ஆண்டு ஜூன் 19ல் திரைக்கு வந்து 100 கோடி வசூலித்தது. இப்படம் திரைக்கு வந்த பிறகு தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார் சமந்தா.

இந்நிலையில், தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா இதழின் அட்டைப்படத்தை அலங்கரித்த சமந்தா, வரவிருக்கும் இந்த புதிய அத்தியாயத்தைப் பற்றி, 'என் வாழ்க்கை முற்றிலும் மாறுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்' என்று அவர் கூறியுள்ளார். மேலும், 'பங்காரம் என்று அழைக்கும் எனது குழந்தை வரவிருக்கும் நிலையில், தாய்மையையும் தனது வாழ்க்கையின் முற்றிலும் புதிய ஒரு கட்டத்தையும் வரவேற்க ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்' என்றும் தெரிவித்துள்ளார் சமந்தா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !