அஜித்தின் கார் ரேஸை நேரில் காண்கிறாரா முதல்வர் விஜய்?
நடிகர் அஜித்குமார், தற்போது கார் ரேஸில் பிஸியாக பங்கேற்று வருகிறார். அவரது 'அஜித்குமார் ரேஸிங்' அணி, இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சுற்றில் நடைபெறவுள்ள Michelin Le Mans Cup கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளது. இதற்கான தீவிர பயிற்சியில் அஜித் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே அவரது கார் ரேஸை மையப்படுத்தி, 'கிளாடியேட்டர்ஸ்' என்ற ஆவணப்படம் உருவாகி, அதற்கான டிரைலரை சமீபத்தில் தியேட்டர்களில் வெளியிட்டனர். நவம்பர் மாதம் அந்த ஆவணப்படம் ரிலீசாக இருக்கிறது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக செப்டம்பர் 10 முதல் 16ம் தேதி வரை பிரிட்டன் தலைநகர் லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளார். விஜய்யுடன் உயர்மட்ட அதிகாரிகள் குழுவும் பிரிட்டன் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
அஜித்தின் கார் ரேஸ் சில்வர்ஸ்டோனில் செப்.,11, 12ல் நடக்க இருக்கும் நிலையில், அதே நாட்களில் விஜயும் அங்கு இருப்பதால், கார் ரேஸை நேரில் பார்ப்பார் என்றும், அஜித்தை சந்தித்து பேசுவார் என்றும் கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாளில் இந்த நிகழ்வு நடக்குமா என்பது தெரிந்துவிடும்.