உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மராத்தியில் பேச சொன்னபோது ஜெயில் கதை சொல்லி சமாளித்த சஞ்சய் தத்.

மராத்தியில் பேச சொன்னபோது ஜெயில் கதை சொல்லி சமாளித்த சஞ்சய் தத்.

சமீபத்தில் மகாராஷ்டிராவில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் அடிப்படை அளவுக்காவது மராத்தி மொழியை பேச வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற விழா ஒன்றில் மகாராஷ்டிரா போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர்நாயக் மற்றும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.. அப்போது இந்த மராத்தி கற்றுக் கொள்ளும் உத்தரவு குறித்து குறிப்பிட்டு பேசிய அமைச்சர் பிரதாப் சர்நாயக், இப்போது நான் எல்லோருக்கும் மராத்தி சொல்லிக் கொடுத்து வருகிறேன், அதனால் சஞ்சய் தத்தையும் மராத்தியில் பேசச் சொல்லி கேட்போம் என்று மேடையிலேயே நேரடியாக அழைப்பு விடுத்தார்.

ஆனால் சஞ்சய் தத்தோ மராத்தி மொழி பேசுவதில் ரொம்பவே வீக்.. இருந்தாலும் சமாளிக்கும் விதமாக மைக்கை பிடித்த சஞ்சய் தத், பிரதாப் பாய், நான் ஆறு ஆண்டுகள் எரவாடா சிறையில் இருந்தேன். அப்போதும் கூட என்னால் மராத்தி கற்றுக் கொள்ள முடியவில்லை. எனக்கு அந்த மொழியில் சிறிதளவு மட்டுமே தெரியும் என்று கூறியவர், அடுத்து அமைச்சரின் தோளில் கை போட்டு தங்களது நட்பு குறித்து ஹிந்தியில் பேச ஆரம்பித்து சமாளித்தார். அவரது இந்த சமாளிப்பு பேச்சு சோசியல் மீடியாவில் பலருக்கு நகைச்சுவையாக இருந்தாலும், ஒரு சிலர் இத்தனை வருடங்கள் மகாராஷ்டிராவில் குடியிருந்து கொண்டு மராத்தி தெரியாமல் இருக்கிறாரே என்று விமர்சன கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !